விரிவான கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் நிதி உள்ளடக்க முயற்சிகள் மூலம் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் லிமிடெட் (NCGIL) உத்தரவாதத் திட்டத்தின் வழிகாட்டுதல்களின் கீழ், நெகிழ்வான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன், MSME கள் இப்போது 13 பங்குதாரர் நிதி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து தங்கள் சாத்தியமான வணிகங்களுக்கான தவணைக் கடன்களைப் பெறலாம்.
சுற்றுலா, விவசாயம், தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஏற்றுமதி போன்ற முக்கிய துறைகளுக்கு சிறப்பு ஆதரவு, பெண்கள் சொந்தமாக நடத்தும் / நிர்வகிக்கும் வணிகங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிகங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துதல்.
நிதி அணுகலை மேம்படுத்துவதன் மூலம், MSME கள் இப்போது புதிய வணிகங்களில் ஈடுபடலாம் என்பதுடன் அவற்றின் தற்போதைய செயற்பாடுகளை விரிவுபடுத்தி இதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கு வலுவான பங்களிப்பை வழங்க முடியும்.